" அன்பு உள்ளம், இறைவன் வாழும் இல்லம் "
" நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை "
என்பது ஒளவையின் அமுத வாக்கு.
நடுத்தர மக்களும் தன் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் பயில எளிமை உணர்வோடு, எண்ணற்ற கனவுகளோடு இப்பள்ளியை உருவாக்கியுள்ளனர். புதிய கட்டடங்களும், 3.11 ஏக்கர் பரப்பளவியில், அறிவியல் கூடம் மற்றும் கணினி அறை, ஆடியோ கேசட்டில் பயிலும் " Smart class Room " என்ற புதிய கல்வி கற்கும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளோம்.
பள்ளியில் கல்வியில் தேர்ந்த சிறந்த ஆசிரியைகளால் கல்வி புகட்டப்படுகின்றது. படிப்புடன் யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், உள் அரங்கு விளையாட்டுகள் அனைத்தும் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வருகின்றோம்.
அறிவு, திறமை, ஆளுமைத் திறன் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசும் திறன் அனைத்தும் கொண்ட மாணவ, மாணவியர்கள் எம் பள்ளிப் படிப்பை முடித்து வெளியேற்த் துவங்கியுள்ளனர். வருங்கால இந்தியாவின் தூண்களாக மனித நேயமிக்க கல்வியாளர்களாக பண்பாட்டின் சின்னங்களாக அவர்கள் விளங்குவார்கள். நன்கு வளர்ந்த பிறகு பிற்காலத்தில் இப்பள்ளியை நன்றி உணர்வோடு அவர்கள் நாள்தோறும் நினைப்பார்கள். அந்நினைப்பில் தான் எங்கள் உழைப்பின் வெற்றி நிறைவு பெறும்.
" நல்லதை நினைப்போம் நல்வழி நடப்போம் நல்லதே நடக்கும்."
